பிரபாகரன் கடவுளாக போற்றப்படுகின்றார்!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கடவுளாக போற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர் எனவும் கூறப்படுவதாக அவர் கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று இராணுவ வீரர்கள், தான் ஆகியோரும் ஆட்கொலை புரிந்தவர்கள் எனவும் திருடர்கள் எனவும் கூறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களே இன்று வெற்றியாளர்களாக மாறியுள்ளதாகவும் மனித உரிமை பாதுகாவலர்களாக இன்று காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.