தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 3/4 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
தோசை அல்லது – 1/2 கப்
உப்பு – தேவைக்கு
மாவில் சேர்க்க :
வெங்காயம் – 1
கேரட் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :
* வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, தோசை மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
* பிறகு அந்த மாவில் வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கேரட், ப.மிளகாய் சேர்த்து கலக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலக்கவும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மிதமான தீயில் வைத்து தோசை மாவை கரண்டியில் எடுத்து தோசைகல்லில் ஊற்றவும். தோசையின் ஓரம் இலேசாக சிவந்து வரும் போது தோசை திருப்பியினால் திருப்பி சுட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பின் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
* சூப்பரான கேழ்வரகு – கோதுமை தோசை ரெடி.
* தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.







