மழை தரும் மாரியம்மன்

பங்குனி மாதத்தில் அம்பிகையின் ஆலயங்களில் பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள, வண்ண வண்ண மலர்களை, கூடைகளில் ஏந்தி பாத யாத்திரையாகச் சென்று அம்பிகையின் மேல் தூவி பக்தி செலுத்துவர். இதனால் அற்புதமான பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. தேனைச் சுமக்கும் பூக்களை அம்பிகைக்கு அர்ப்பணிக்கும் பொழுது தேனான வாழ்க்கை நமக்கு அமையும். நாம் பாதயாத்திரை செல்லும் பொழுது ஓம்சக்தி என்று நாம் உச்சரிக்கும் பொழுது நாம் சக்தி பெறுவோம்.


அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும். மழைவளம் பெருகும். ‘மாரியல்லால் ஒரு காரியமில்லை’ என்ற பழமொழிப் படி மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், மகத்தான பலன் நமக்குக் கிடைக்கும். சீரும், சிறப்பும் செல்வாக்கும் பெருக வைக்கும் மாரியம்மனை, பங்குனி மாதத்தில் மலர்தூவி வழிபடுவோம். புகழ் குவிய வழிகாண்போம்.