தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி – 1/4 கப்
வரகு அரிசி – 1/4 கப்
சாமை அரிசி – 1/4 கப்
தினை அரிசி – 1/4 கப்
உளுந்து – 1/4 கப்
வெந்தயம் – சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் – 13
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
* வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
* கணு நீக்கிய பிரண்டையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
* சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.
* பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.