முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நாம் குறைக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றிற்குப் பதில் அளித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசிய பிரதமர்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை குறைத்தது போன்று மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்க மாட்டோம். மாறாக அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துவோம்.
இதேவேளை, விசேட கொடுப்பனவ பயற்சி பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு வழங்குகின்றோம். எனது பாதுகாப்பு பிரிவிலும் விசேட கொடுப்பனவு பெறாதவர்கள் பலர் உள்ளனர். இதனை பயற்சி அடிப்படையிலேயே பெற்றுக்கொடுப்போம்.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவினர் முதலில் பயற்சிக்கு சென்றால் கொடுப்பனவு வழங்கப்படும். பயற்சி பெற்றால் மாத்திரமே கொடுப்பனவு என்றார்.
முன்னதாக, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு சேவையில் ஈடுப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிரயாண செலவு மற்றும் அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒன்று விசேட கொடுப்பனவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொலிஸ் உத்தியோகத்தவர்களுக்கு கிடைப்பதில்லை.
அவர்களது விசேட கொடுப்பனவு மே மாதம் முதல் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.







