அமெரிக்காவுக்குள் நுழைய 6 நாட்டினருக்கு 90 நாட்கள் தடை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி 27-ந் தேதி, சிரியா நாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய காலவரையற்ற தடை விதித்தும், ஈராக் உள்பட 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 90 நாட்கள் தடை விதித்தும் ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். ஆனால் அந்த உத்தரவுக்கு சியாட்டில் நகரில் உள்ள கோர்ட்டு தடை விதித்து விட்டது.

இதையடுத்து, புதிய உத்தரவு ஒன்றில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

அதில், சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் ஏற்கனவே உரிய விசா பெற்று இருந்தால், அமெரிக்காவுக்கு வர தடை இல்லை.

கடந்த ஜனவரி 27-ந் தேதி, தடை பட்டியலில் இடம்பெற்று இருந்த ஈராக், இந்த புதிய உத்தரவில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

மேலும், அகதிகளை அனுமதிக்கும் பணி, 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.