புத்துணர்ச்சி தரும் மேங்கோ – ஆனியன் சாலட்!!

தேவையான பொருட்கள் :

மாம்பழத் துண்டுகள் – 1
வெங்காயம் – ஒன்று
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகு தூள் – தேவைக்கு
சாட்மசாலா – தேவைக்கு
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

* கடைசியாக மிளகு தூள், சாட் மசாலா தூள் தூவி பரிமாறவும்.

* சத்து நிறைந்த மேங்கோ – ஆனியன் சாலட் ரெடி.