யதார்த்தமான படங்களில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும்: கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கவண்’. இது பற்றி  இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது,

“கார்பரேட் மோசடி பற்றிய படம் தான் ‘கவண்’. எனது பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டார். இது  போன்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும். அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்தேன்.

இந்த படத்தில் டி.ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரைப்போன்ற பொறுப்பான கலைஞரை நான்  பார்த்ததே இல்லை. ஒரு காட்சியில் அவருடன் நடித்த இன்னொரு நடிகர் 15 டேக் வாங்கினார். என்றாலும், கோபப்படாமல் 15  முறை வசனம் பேசி நடித்தார்.

‘காதலும் கடந்து போகும்’ படம் பார்த்தேன். அதில் விஜய்சேதுபதி மடோனா செபாஸ்டியனின் ஜோடி பொருத்தம் நன்றாக  இருந்தது. ‘கவண்’ படத்திலும் மடோனா அருமையாக நடித்திருக்கிறார்” என்றார்.