வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு மற்றும் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்படும் நீதிச் செயல்முறைகளில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அரசாங்கம் அழைக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்திருக்கிறது.

ஆனால், வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைப்பதில்லை என தெளிவான நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.