முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்த சசிகலாவுக்கு ஏன் நோய்தொற்று ஏற்படவில்லை என அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலிதாவின் பிறந்த நாள் கடந்த 24 ஆம் திகதி பன்னீர் செல்வம் தரப்பினரால் கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் பத்திரிகையாளர்களை சந்தித்த பொன்னையன், செப்டம்பர் 22 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் போயஸ் தோட்டத்தில் தாக்கப்பட்டிருக்கிறார்.
அப்பல்லோவில் இருந்த காலகட்டத்தில் பன்னீர் செல்வம் உட்பட மைத்ரேயன் என யாருக்கும் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், ஜெயலலிதாவுக்கு நோய்த்தொற்று இருந்த காரணத்தினால், அவருடன் 75 நாட்கள் அப்பல்லோவிலேயே இருந்த சசிகலாவுக்கு ஏன் நோய்தொற்று ஏற்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.







