நெடியவன் தலைமையில் மீண்டும் புலிகள் மீளுருவாக்கம் : கோத்தபாய

நெடியவன் தலைமையில் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கத்திற்கான செயற்பாடுகள் அன்று காணப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் படுகொலை சதி மற்றும் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் சுமந்திரன் படுகொலை சதி தொடர்பான புலனாய்வு தகவல்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அது தொடர்பில் ஒன்றும் என்னிடம் இல்லை.

நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த வேளையில் நெடியவன் போன்ற ஆட்கள் குறித்து அதிகளவில் புலனாய்வுகளை மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் அவர்கள் மீண்டும் பயங்கரவாத செயற்பாட்டினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்ற தகவல்களை அறிந்திருந்தோம்.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடு மீள ஆரம்பிக்கும் பட்சத்தில் தம்மிடம் சிறப்பான பாதுகாப்பு திட்டமும் அன்று கைவசம் இருந்தது.

இதற்கு பின்னர், குறிப்பாக யுத்தத்தின் பின்னர் மக்களின் காணிகளை விடுவித்தோம், அதிகளவிலான சுதந்திரத்தினை அவர்களுக்கு வழங்கினோம்.

மேலும், வீதித்தடைகளை அகற்றி இருந்தோம், வடக்கில் படையினரின் எண்ணிக்கையினை குறைத்தோம் என கோத்தபாய ராஜபக்ஸ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.