கொழும்பு, வெல்லவாய பிரதேசத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்விற்காக ஒரு கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பிரதேசத்தில் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் அண்மையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு ஒரு கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு மதிப்பீட்டை ஊவாமாகாண சபை சமர்ப்பித்துள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை ஆளுநர் இந்த குறை நிரப்பு மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.