போரை வெற்றிகொண்டது எப்படி என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.
போரை வெற்றிகொள்வதற்கு இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய, சீனாவிடையே எழுந்துள்ள இலங்கை மீதான முதலீட்டு போட்டிகளுக்கிடையே, தற்போது கோத்தபாய ராஜபக்ஷ உள்ளூர் ஊடகமொன்றிக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் ஆயுதம் தாங்கிய யுத்தத்திற்கு, இந்திய அரசானது மிகவும் கடுமையான பயிற்சியை, இலங்கை இராணுவத்திற்கு வழங்கியதோடு, தமிழ் நாட்டில் ஏற்பட்ட குழப்ப சூழல் காரணமாக ஆயுதங்களை வழங்கவில்லை, ஆகையால் இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு, முழுமையாகவே சீனாவின் ஆயுத கொள்வனவை நம்பி செயற்படும் நிலையே இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பாரிய ஆயுதங்களை வழங்கியதோடு, விமானப்படை தாக்குதல்களுக்கு உறுதுணையான, விமானங்களை வழங்கி உதவியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆக்கிரமிப்பு போட்டிகள் தலைதூக்கியுள்ள நிலையிலும், இந்திய பெருங்கடலில் சீனாவின் இராணுவ அத்துமீறல்கள் தொடர்பான சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையிலும், தற்போது நடந்து முடிந்த போரில் இந்திய, சீனாவின் வகிபங்குகள் பற்றி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







