யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி நல்லூர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இராசநாயகம் சாவித்திரிதேவி என்ற 76 வயதுடைய மூதாட்டியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று மதியம் 12 மணியளவில் குறித்த மூதாட்டி கோவில் வாயிலில் நின்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதன்போது அதிக வெப்பம் ஏற்படவே அதனை தாங்கமுடியாமல் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
இதன் போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.