உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடுவேன்: விராட் கோலி!!

விராட் கோலி தனது ஆட்டம் மூலம் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் வாயிலாகவும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி ஒரு விளம்பரத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சர்வதேச விளையாட்டு நிறுவனமான ‘பூமா’ விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரே விளம்பரத்தில் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது புதிய சாதனையாகும்.

இதுகுறித்து பூமா நிறுவனத்தில் ஏற்கனவே விளம்பரத் தூதராக இருக்கும் உலகின் நம்பர் 1 தடகள வீரர் உசைன் போல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் ”விராட் கோலி இதற்கு சரியான தேர்வு” என புகழ்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள விராட் “ஒருநாள் உங்களைவிட வேகமாக ஓடுவேன். நன்றி ஜாம்பவான்” என குறிப்பிட்டுள்ளார்.