ஐ.பி.எல். ஏலம்: பென் ஸ்டோக்ஸ் சாதனை!

* ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு போன வெளிநாட்டவர் என்ற சிறப்பை பென் ஸ்டோக்ஸ் (ரூ.14½ கோடி) பெற்றார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவின் யுவராஜ்சிங் 2015-ம் ஆண்டு ரூ.16 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக நீடிக்கிறது.

* உறுப்பு நாடுகளில் நெதர்லாந்தை சேர்ந்த ரையான் டென் டஸ்சாட் மட்டுமே இதற்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடியிருந்தார்.

* இந்த சீசனில் மேலும் மூன்று உறுப்பு நாடு வீரர்கள் அதாவது ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகிய இருவர் ஐதராபாத் அணிக்கும், ஐக்கிய அரபு அமீரக வீரர் சிராக் சுரி குஜராத் லயன்சுக்கும் விளையாட உள்ளனர்.

* நேற்றைய ஏலத்தில் எடுக்கப்பட்ட 6 இங்கிலாந்து வீரர்களின் மதிப்பு மட்டும் ரூ.34.3 கோடி. அதே சமயம் ஏலம் போன 39 இந்தியர்களின் ஒட்டுமொத்த தொகையை கணக்கிட்டால் ஏறக்குறைய ரூ.10 கோடி தான்.

* அதிகபட்சமாக குஜராத் லயன்ஸ் 11 வீரர்களையும், குறைந்த எண்ணிக்கையாக பெங்களூரு அணி 5 வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.