5,000 இந்தியர்கள் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க பதிவு!

கச்சதீவு புனித அந்தோனியர் தேவாலாய திருவிழாவில் பங்கேற்பதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய பக்தர்கள் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராமேஸ்வரத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் உள்ளடங்கலாக 5 ஆயிரத்து 15 இந்திய பக்தர்கள் கச்சதீவு புனித அந்தோனியர் தேவாலாய திருவிழாவில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு திருவிழா அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

புனித அந்தோனியார் தேவாலாயம் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டிருந்த நிலையில், தேவாலயத்திற்கு செல்வதற்கு அதிகமானவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

கடந்த ஆண்டு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன், 3 ஆயிரத்து 249 பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் இவ்வாண்டு குறைந்தது 4 ஆயிரத்து 500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பக்தர்களுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சகாயராஜா தெரிவித்துள்ளார்.