பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகர். செவான் நகரில் உள்ள மதகுரு லால் ஷபாஸ் குவாலண்டரின் தர்காவில் இன்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
தர்காவில் ஏராளமானவர்கள் கூடியிருந்த போது திடீரென ஒருவர், தான் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் இருந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் 30 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செவான் நகர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இந்த கொடூரமான குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரமாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.