புதிய முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி பதவியேற்றுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.
இன்று நள்ளிரவு அண்ணா சாலை முழுவதிலும் இந்த போஸ்டரை ஒட்டினார்கள். அந்த போஸ்டரில் ‘மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ ,’NEXT நீங்க CM ஆனா BEST’ என்ற வாசகங்களுடன் பின்புறம் தலைமைச்செயலகத்தின் படமும், ஆளுயர ரஜினி படத்தையும் வைத்து அமைத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரத்திலும் இந்த போஸ்டரை பலர் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.







