ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் : மதுசூதனன் பேட்டி!

மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைப்போம் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் முன்னாள் முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அவருடன் மூத்த தலைவர்கள் மதுசூதனன், பி.எச். பாண்டியன், பொன்னையன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மதுதூதனன் கூறுகையில், தொகுதி மக்களின் விருப்பத்தை கேட்டு எம்எல்ஏக்கள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் எனவும் கூறிய மதுசூதனன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என மக்கள் சந்தேகப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் மக்கள் விரும்பாத முதல்வர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறிய அவர், எங்களது தர்ம யுத்தம் தொடரும் என்றும் கூறினார்.