பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் வலைத்தளத்தை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் பேஸ்புக் வலைத்தளத்தை தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளமையால் கட்டாயம் பேஸ்புக் வலைத்தளத்தை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக ஒரு நாள் பேஸ்புக் தடையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தற்போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.