தமிழக மக்களிடம் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. மன்னார்குடி குடும்ப ஆதிக்கம் முடிவுக்கு வந்து விட்டதாக தேநீர் கடை முதல் கோட்டை வரை விவாதிக்கப்படுகிறது.
இந்திய நீதிமன்ற வரலாற்றில் 21 ஆண்டு காலம் நடைபெற்ற முதல் வழக்கில் அமரர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய நான்கு பேருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்.
மேல்முறையீட்டில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு. அரசியல்வாதிகளுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடம் என்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இத்தீர்ப்பு நான் எதிர்பார்த்ததுதான் என்கிறார் இவ்வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி. விகே சசிகலாவை எதிர்த்து குரல் எழுப்பியதால் தமிழக மக்களிடம் ஹீரோவாக உயர்ந்து வெகுஜனங்களின் மதிப்புக்குரியவராக கடந்த ஒரு வாரமாக பார்க்கப்பட்டு வருகிறார் ஓபிஎஸ். நீதிமன்ற தீர்ப்பால் விகே சசிகலா வீழ்த்தப்பட்டிருப்பதால் பன்னீர் செல்வம் முதல்வராக தொடர்வதற்கும், அதிமுக கட்சியை கைப்பற்றுவதற்கும் இருந்த மிகப் பெரும் தடை தற்போது நீங்கி விட்டது.