சொகுசு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை காண 3வது நாளாக இன்று சசிகலா கூவத்தூர் சென்றார்.
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவும், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக யாரும் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் சசிகலா 119 எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் 6 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு வெளியுலகத்தில் இருந்து எந்தவித தொடர்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக செல்போன், கேபிள் டிவி, செய்தித்தாள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சசிகலா கூவத்தூர் சென்று அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களிடம் சசிகலா பேசியதாவது:
சட்டசபை கூட்டம் நடைபெறும் போது நிகழ்ந்த சில சம்பவங்கள்தான் ஓபிஎஸ் மேல் எனக்கு சந்தேகம் உருவானது என்றும் சசிகலா கூறினார்.







