ஜெ. யாரிடமும் அன்பாக பேசுவதை பொறுத்துக் கொள்ளாதவர் சசிகலா: ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!!

அ.தி.மு.க.வில் 2-ம் கட்ட தலைவர்கள் உருவாகாமல் போனதற்கு சசிகலா தான் காரணம் என முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா யாரிடமும் அன்பாக பேசுவதை சசிகலாவால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக ஒபிஎஸ் அணி சசிகலா அணி என அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இதில் யார் ஆட்சியயை பிடிப்பது என்ற மோதல் வலுத்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா ஏன் பேட்டியளிக்கவில்லை என்ற அவர், அது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜெ. அன்பாக பேசுவதை பொறுத்துக்கொள்ளாதவர்
ஜெயலலிதா யாரிடமும் அன்பாக பேசுவதை பொறுத்துக்கொள்ளாதவர் சசிகலா என்றும் பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார். இதனாலேயே அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

தீபாவை சந்திக்க விடாமல் சதி செய்த சசி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது அண்ணன் மகள் தீபாவை சந்திக்க விடாமல் சதி செய்தவர் சசிகலா எனவும் பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். தான் மட்டுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இருக்க வேண்டும் என சசிகலா விரும்பியதாகவும் அவர் கூறினார்.

அசாதாரண சூழலை தவிர்க்கவே
மேலும் தான் கூவத்தூருக்கு சென்றால் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டுவிடும். இதனாலேயே விட கூடாது என்பதற்காகவே சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க தாம் கூவத்தூருக்கு செல்லவில்லை என பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் பதவி
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் மூலம் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.