மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று வேண்டாம்..! சர்வஜன வாக்குரிமை அவசியம் என்கிறது கூட்டமைப்பு!!

புதிய அரசியமைப்பு குறித்து சர்வஜன வாக்குரிமை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

13ஆம் திருத்த சட்டத்திற்கு ஏற்பட்ட நிலை புதிய அரசியலமைப்பிற்கு ஏற்பட்டுவிடக்கூடாது. அத்துடன், சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் அரசியலமைப்பாகவும் புதிய அரசியலமைப்பு மாறிவிடக்கூடாது.

எவ்வாறாயினும், நாட்டில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் ஒன்று இடம்பெறக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டும் முயற்சிகள் வெற்றியடையும் வரையில் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.