அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பாகவும் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம்.
இது குறித்து நுகர்வோர் அதிகார சபை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அந்த விலைக்கு அரிசியை விற்க முடியாதிருப்பதாக மக்கள் தெரிவிக்கும் நிலையிலேயே தெரிவித்துள்ளது.
இதன்படி தமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளுக்கமைய சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.