ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் 11 நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தச் சலுகை வழங்கப்படாதென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மோசடிகளையும் துஷ்பிரயோகங்களையும் ஒழித்தல், இலாபமீட்டாத நிறுவனங்களை விற்பனை செய்தல், திமன்றங்களின் சுயாதீனத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மாத்திரமே இந்த வரிச்சலுகை கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருப்பதால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஸ்ரீலங்கா உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், தவறினால் அந்தச் சலுகை நிரந்தரமாகவே கிடைக்காது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.