தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் – 3/4 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை:
* மிளகை வாணலியில் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து வைக்கவும்.
* முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் அவலை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* கடைசியாக அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* சூப்பரான பெப்பர் அவல் ரெடி