இலங்கையின் மிக முக்கியமான பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மொத்தமாக 759 இடங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கவின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதை கூறியுள்ளார்.
அதன்படி வடக்கில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 14 இடங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 இடங்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 இடங்கள்
வவுனியா மாவட்டத்தில் 50 இடங்கள்
மன்னார் மாவட்டத்தில் 60 இடங்கள்
மேலும் கிழக்கில்,
அம்பாறை மாவட்டத்தில் 423 இடங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்கள்
திருகோணமலை மாவட்டத்தில் 25 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இவ்வாறு வடக்கிலும் கிழக்கிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான 759 இடங்கள் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
குறித்த 759 இடங்களில் 23 இடங்களில் மாத்திரமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட இடங்களை பாதுகாத்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.