கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, கடந்தாண்டில் 9.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14.5 மில்லியன் விமான பயணிகள், விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் பயணிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும், வருடத்திற்கு 15 மில்லியன் வரையில் பயணிகளின் வருகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் தூரத்தில் இருந்து இயக்கும் விமான தரிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.