அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ஜெயலலிதா வெளியிடக்கூறியதாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, மருத்துவர் சிவக்குமாரிடம் நன்றாகப் பேசினார்.
ஒரு கட்டத்தில், நினைவு திரும்பியபோது, இத்தனை நாள் இங்கே இருந்து விட்டேனே?.. நான் நன்றாக இருக்கிறேன் என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? என்னுடைய புகைப்படத்தையும் என் அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்று சிவக்குமாரிடம் ஜெயலலிதா சொன்னாராம்.
இதை சிவக்குமார், சசிகலாவிடம் தெரிவித்தபோது, ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட அவர் மறுத்து விட்டாராம். அதிலிருந்தே சிவக்குமார் படிப்படியாக விலக்கி வைக்கப்பட்டார்.
போயஸ்கார்டனுக்கு போவதையும் குறைத்துக் கொண்டார். அதனால்தான், டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் அளித்த பிரஸ் மீட்டிற்கு சிவக்குமார் அழைக்கப்படவில்லை” என்றார்.
ஜெயலலிதா உடல்நிலை பற்றிய முழு விவரம் தெரிந்த டாக்டர் சிவக்குமாரை ஏன் சசிகலா ஓரம்கட்டி வைத்திருக்கிறார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது என அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.







