சசிகலா தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அஞ்சியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் இருவரும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய பி.எச்.பாண்டியன் கூறியதாவது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு வீட்டில் என்ன நடந்தது என மர்மமாக உள்ளது. அவரது மரணம் குறித்த விசாரணை வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய மனோஜ் பாண்டியன் கூறியதாவது, சசிகலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டனர்.
பின்னர், ஜெயலலிதா தனக்கு உதவியர் தேவை என்பதால் சசிகலாவை அனுமதித்தார்.
சசிகலாவை அரசியலில் ஒருபோதும் ஈடுபடுத்தமாட்டேன் என ஜெயலலிதா உறுதியளித்தார்.
இதனையடுத்து, சுற்றியுள்ளவர்களே என்னை கவிழ்க்க சதிசெய்வதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், சசிகலா என்னை விஷம் கொடுத்து கொல்லக்கூடும் என்ற அச்சம் உள்ளதாக ஜெயலலிதா தெரிவித்ததாக மனோஜ் பாண்டியன் பரபரப்பு தகலலை வெளியிட்டுள்ளார்.







