அரச வாகனத்தை மோசடியாக பயன்படுத்தும் பொன்சேகாவின் மனைவி!

ரணவிரு சேவை அதிகாரசபையின் தலைவர் அனோமா பொன்சேகா, 15 மில்லியன் பெறுமதியான அரச வாகனம் ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் சுற்றறிக்கையை மீறியே Mitsubishi Montero V98W XSR என்ற வாகனத்தை தன்வசம் வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் உள்ள தலைவர்கள் குத்தகைக்கு கொள்வனவு செய்யும் வாகனங்களுக்கு மாதத் தவணை கட்டணமாக 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாவையே அதிகபட்சமாக செலுத்த முடியும்.

இருப்பினும்,அனோமா பொன்சேகாவினால் கொள்வனவு செய்யப்பட்ட ஜீப் வண்டிக்கு மாதம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 784 ரூபாவை செலுத்தி வருகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனோமா,பாதுகாப்பு அமைச்சின் கொள்முதல் குழுவுக்கு அனுப்பிய கடித்தத்தின் மூலமே குறித்த குத்தகை பணம் செலுத்துவதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனோமா, அமைச்சர் சரத் பொன்சேகாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.