சந்திரிகாவின் கருத்திற்கு சீனா கண்டனம்!

சீன அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு15 பில்லியன் ரூபாவை வழங்கியிருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறிய கருத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் திட்டத்திற்கென மஹிந்தவுக்கு பணம் கொடுத்ததாக சீன தூதுவரே தன்னிடம் தெரிவித்தார் என அண்மையில் அத்தனகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சந்திரிகா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருட காலமாக சந்திரிகாவை தொடர்புகொள்ளவே இல்லையென்றும் தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கூறப்பட்ட பொய்யே இதுவெனவும் சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிகாவின் இக் குற்றச்சாட்டு தொடர்பாக ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ், சீன தூதுவரை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.