எதிர்பாராத விதமாக இலங்கையை முற்றுகையிடும் ஐரோப்பியர்கள்!

இலங்கை வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 13 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ள போதிலும், கடந்த மாதம் 219,360 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும், அது மிகப்பெரிய சாதனையாக உள்ளதென சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு தசாப்தங்களின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் விமான நிலையம் மூடப்படுவதோடு, இரவு நேரங்களில் மாத்திரம் விமான நிலையம் செயற்பாடுகிறது.

இந்த செயற்பாடு காரணமாக சுற்றுலா துறைக்கு பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அச்சம் வெளியிட்டிருந்தார்.

அதிக குளிரான காலநிலையை கொண்ட காலப்பகுதியினுள் மேற்கு ஐரோப்பாவில் இருந்து மாத்திரம் கிட்டத்தட்ட 72,500 சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கடந்த காலங்களை விட இந்தத்தொகை 14 வீத அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சீனாவில் இருந்து 48,773 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும், அது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 26 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தது.