பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியிடம் தென்ஆப்பிரிக்கா தோல்வி

10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் சந்தித்தன. முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டேவிட் லான்ட்ரே ஆட்டம் இழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணியில் துர்கா ராவ் 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜாபர் இக்பால் 54 ரன்னுடனும், முகமது பர்ஹான் 59 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். பாகிஸ்தானிடம் மட்டும் தோல்வி கண்டு இருந்தது. அடுத்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இன்று இலங்கையை சந்திக்கிறது.