வலஸ்முல்ல – போவல பிரதேசத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கபட்ட நபரொருவர் 12 வருடங்களின் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் வலஸ்முல்ல போவல பகுதியை சேர்ந்த 77 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இவர் கைதில் இருந்து 12 வருடங்களாக தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு மித்தெனிய,முருதுவல பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் குறித்த நபர் தொடர்புப் பட்டுள்ளார்.