கருக்கலைப்பு தொடர்பில் குற்றவியல் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இது குறித்து பல திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதவான் பீ.பி.அலுவிகாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் , துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் அல்லது 16 வயதுக்கு குறைந்த பெண்களின் கர்ப்பம் மற்றும் கரு பலவீனமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு மேற்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நீதி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர் த சில்வா தெரிவித்துள்ளார்.







