புலிகள் மீண்டும் இணைகின்றார்கள்; மகிந்தவின் எச்சரிக்கையால் வெடிக்கும் சர்ச்சை.!

மீண்டும் விடுதலைப்புலிகள் ஒன்று திரண்டு கொள்ளக் கூடும், நாம் செல்கின்றதை எவரும் கேட்க வில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று அநுராதபுர விகாரை ஒன்றிக்கு விஜயம் செய்த அவர் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

விடுதலை செய்யப்பட்ட 12000 ஆயிரம் விடுதலைப் புலிகளில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள், புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களும் இருக்கின்றார்கள்.

இப்போது அவர்களை விடுதலை செய்த காரணத்தினாலேயே இப்போது பிரச்சினைகள் உருவாகின்றன என கூறி வருகின்றார்கள்.

அப்படி என்றால் அப்போதே சொல்லி இருக்கலாமே அவர்களை விடுதலை செய்ய வேண்டாம் என இப்போது பொய்யாக சொல்லி வருகின்றார்கள்.

நாம் விடுதலைப்புலிகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தோம். புலனாய்வுத் துறையினர் மிகுந்த கவனத்துடன் இருந்தார்கள்.

அவற்றை குறைத்தது இப்போதைய அரசே இப்போது “காணாம் காணாம்” (காணவில்லை, காணவில்லை) என கூப்பாடு போடுகின்றார்கள். இன்னும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

உண்மையில் இது மக்களின் பிரச்சினை அல்ல. இவற்றிக்கு பிரதான காரணம் அரசு வடக்கின் பாதுகாப்பை குறைத்துக் கொண்டமையினாலும், இராணுவ முகாம்களை அகற்றியமையாலுமே ஏற்பட்டன.

மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவார்கள் ஒன்று திரண்டு விடுவார்கள் என நாம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே வந்தோம். ஆனால் ஐந்து சதத்திற்கும் எமது பேச்சை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை.

இராணவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கூறினோம். ஆனால் யாரும் கேட்கவில்லை. சுமந்திரன் போன்றோரே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு பதில் அளிக்க வேண்டும்.

மேலும் மீண்டும் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நான் தலைமையை ஏற்றுக் கொள்ளுவேன். இப்போதே கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராகவே நான் இருக்கின்றேன் எனவும் மகிந்த தெரிவித்தார்.

இதேவேளை தென்னிலங்கை தரப்பில் அண்மைக்காலமாக புலிகள் வருகின்றார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு கொண்டு வரும் வேளையில் மகிந்தவின் இந்த எச்சரிக்கையால் புதுச் சர்ச்சைகள் வெடிக்கும் எனவும்.,

இதன் காரணமாக வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் அரசு மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.