ஜனாதிபதி மரணிப்பார்! ஆரூடம் கூறிய ஜோதிடர் பிணையில் விடுதலை!!

ஜனாதிபதி இறந்துவிடுவார் என்று ஆரூடம் கூறிய ஜோதிடர் விஜித ரோஹண பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்ட இவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றம் 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

மேலும் குறித்த ஜோதிடர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னிலையாகுமாரும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

இன்றைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.