பெப்ரவரி மாதம் 15 -ம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இன்று தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தும் பல முறை நாமல் ராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகமையால், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை அவமதித்துள்ளதாக விளக்கமளித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே இந்த இது அறிவிக்கப்பட்டுள்ளது.







