இராணுவத்தினரை பயன்படுத்தி கஞ்சா உற்பத்தி!

மருந்துக்காக பயன்படுத்தும் நோக்குடன் கஞ்சாவை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு மகா சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் அதனை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு தேவையான தேசிய மருந்து வகைகள் சிலவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அபிங் அவற்றில் ஒன்று எனவும், கஞ்சாவை உற்பத்தி செய்யும் யோசனையை அண்மையில் தான் முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இராணுவத்தினரைக் கொண்டு கஞ்சாவை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கஞ்சாவை போதைப் பொருளாக பயன்படுத்தினால் தான் பிரச்சினை எனவும், மருந்தாக பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.