அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் பன்னீர் செல்வத்தை அவமதிப்பது தமிழக மக்களை அவமதிப்பது சமமாகும் என தமிழக காங்கிரஸ் முன்னால் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் அவர் கூறியதாவது, வறட்சி, ஜல்லிக்கட்டு பிரச்னைகளில் பன்னீர் செல்வத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது. அதே சமயம் இளைஞர்கள், மாணவர்கள் போராடியது உணர்வுப்பூர்வமானது. அமைதியாக நடந்த போராட்டத்தில் தடியடி நிகழ்த்தியது ஏற்புடையதல்ல என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தனக்கு தனி இருக்கை போட்ட சசிகலா, கூட்டத்துடன் முதல்வரை அமர செய்தது பன்னீர்செல்வத்துக்கு அவமானம் இல்லை, தமிழக மக்களை அவமதிப்பதாகும். இது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.