மகிந்தவின் விமானப் பயணங்களுக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2011 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து விலகிச் செல்லும் வரை அவர் மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக செலுத்த வேண்டிய பல ரசீகளுக்கான கட்டணங்களை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த ரசீதுகளுக்கான கட்டணங்களை செலுத்துமாறு கோரி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் அவற்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக 11 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 724 ரூபா 21 (113,404,724.21 ) சதத்தை செலுத்த வேண்டும்.

இதனை அவர்கள் செலுத்தாத காரணத்தினால், ஜனாதிபதி செயலகம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் விசேட விமானங்களை ஒதுக்கி கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருப்பதி சென்ற விமானப் பயண கட்டணத்திற்கான ரசீதையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஜனாதிபதி செயலத்திற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.