அனைத்து இன மாணவர்களும் ஒரே பாடசாலைகள்!

ஒரே பாடசாலையில் சகல இன மாணவர்களும் கல்வி கற்க கூடிய வகையில் புதிய குறிப்பாணை ஒன்றை தயார் செய்து வருவதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காலி உடுகம பிரதேசத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன பிள்ளைகளும் ஒரே பாடசாலையில் கல்வி கற்க கூடிய சூழலை உருவாக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன அடிப்படையில், பாடசாலைகளை பிரிப்பதன் மூலம் பிள்ளைகள் மத்தியில் தேவையற்ற வெறுப்புணர்கள் ஏற்படுகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.