தற்போது ஜோதிடத்தையும் புதல்வர்களையும் நம்பி அரசியலை தொடரும் மஹிந்த?

மஹிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு அரசியல்வாதி என்பது யாவரும் அறிந்தவிடயமே அவர் ஜோதிடத்தை நம்பியே இரண்டு வருட ஜனாதிபதியாக இருக்கும் வாய்ப்பையும் இழந்தார்.

இப்பொழுதும் அவர் ஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைத்திருப்பதோடு இதற்காக பல லட்சத்தை மாதாந்தம் செலவு செய்து ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே தனது அரசியல் நடவடிக்கைகளை  செயல்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது மஹிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கமைய அவரது  அரசியல் அனைத்து நடவடிக்கைகளையும் தனது புதல்வர்  யோஷித ராஜபக்சவுடன் இணைத்தே செயல்படஜோதிடர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்

தனது கனவாக இருக்கும் இந் நாட்டு முக்கிய தலைவராக்க நினைத்திருக்கும்  நாமல் ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதே சிறந்த பலனை கொடுக்குமென ஜோதிடர்கள் குறிப்பிட்டிருப்பதாகவும் அதுவரை தனது இளைய புதல்வரின் ஜாதகத்தை பயன்படுத்ததவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு ஏற்றவாறு  தற்பொழுது மஹிந்த ராஜபக்ச  தனது  அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது யோஷித ராஜபக்சவை அவர் அருகில் அழைத்து இணைத்துக்- கொள்வதாகவும்,தெரிவிக்கப்படுகின்றது.