சர்வதேச பேட்மிண்டன் போட்டி: கால் இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-7, 21-12 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் லலிதா தாஹியாவை 19 நிமிடங்களில் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் அன்சால் யாதவை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சாய் பிரனீத், சவுரப் வர்மா ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர்.