ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.