பிணை முறி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு!!

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை தாமதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவுக்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளும் நோக்கத்திலேயே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.

மாறாக விசாரணைகளை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.