அரசாங்கம், காணாமற்போனோர் பணியகத்தை நிறுவும் செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகளுக்கான பணியகத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘நாட்டில் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, அபிவிருத்தியை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
போரின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை அரசாங்கத்தினால் விடுவிக்க முடிந்திருக்கிறது.
காணாமற்போனோருக்கான பணியகத்தை விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் மார்ச் மாதம், உண்மை கண்டறியம் ஆணைக்குழுவும் நிறுவப்படும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.